புற்றுநோயைப் பற்றி நீங்கள் எதுவும் கேட்க வேண்டுமா?
‘புற்றுநோய் ஆலோசனைக் குழு’வைச் சேர்ந்த புற்றுநோயியல் சிறப்புத் தாதியர் ஒருவருடன் அந்தரங்கமான முறையில் நீங்கள் உரையாடலாம்.
பின் வரும் சேவைகளை வழங்குவதில் எமது கனிவு மிக்க புற்றுநோயியல் தாதியர் பயிற்சி பெற்றவர்களாவர்:
- புற்றுநோயைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு அளித்தல்
- புரிந்துகொள்வதற்கு எளிதான வகையில் ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகளைப் பற்றி விளக்கிச் சொல்லுதல்
- உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் உங்களுக்கு இருக்கவல்ல கேள்விகள் மற்றும் கவலைகளைப் பற்றியும் உங்களுடன் பேசுதல்
- சட்ட உதவி மற்றும் நிதியுதவி ஆகியன உள்ளடங்க, உங்களுக்கு உதவிகரமாக இருக்கக்கூடிய தகவல்கள் மற்றும் சேவைகளைப் பற்றி உங்களுக்குத் தகவல்கள் அளித்தல்.
புற்றுநோயியல் தாதியர் ஒருவருடன் நீங்கள் மொழிபெயர்த்துரைப்பாளர் உதவியோடு பேசலாம்.
அப்படிப் பேசுவதற்கு பின் வருமாறு செய்தால் மட்டும் போதும்:
- திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 13 14 50 எனும் இலக்கத்தினை அழையுங்கள்.
- உங்களுக்குத் தேவைப்படும் மொழியின் பெயரைச் சொல்லுங்கள்.
- மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவருக்காக இணைப்பில் காத்திருங்கள் (இதற்கு 3 நிமிடங்கள் வரை ஆகலாம்).
- 13 11 20 எனும் இலக்கத்தில் ‘விக்டோரிய புற்று நோய் சபை’யுடன் தொடர்புகொள்ளுமாறு மொழிபெயர்த்துரைப்பாளரைக் கேளுங்கள்.
- மொழிபெயர்த்துரைப்பாளரது உதவியோடு புற்றுநோயியல் தாதி ஒருவருடன் பேசுங்கள்.
இது உம் உயிரை காக்கும்.
எமது சமூகத்தில் பொதுவாகக்காணப்படும் புற்றுநோய் வகைகளில் ஒன்று குடல் புற்றுநோயாகும். சோதனை கருவியால் பரிசோதிக்கவும்.
தகவல் ஏடுகள் (Fact sheets)
பின் வரும் கோப்புக்களைப் பார்க்க ‘அடோபி ஆக்ரொபாட் ரீடர்’ எனும் மென்பொருள் உங்களுக்குத் தேவைப்படும். அதை இலவசமாக வலையிறக்கம் செய்யுங்கள்.