கருப்பை வாய்ப் பரிசோதனையானது, 25 வயதிற்கும் 74 வயதிற்கும் இடையான அனைத்து பெண்களுக்குமான ஒரு முக்கிய பரிசோதனையாகும்.
கருப்பை வாய்ப் பரிசோதனையானது எம்மைக் கருப்பை வாய்ப் புற்று நோய் ஏற்படுவதில் இருந்து காப்பாற்ற முடியும். மனிதப் பப்பிலோமா வைரசுக்கள் (HPV) உங்களுடைய கருப்பை வாயில் உள்ள கலங்களில் மாற்றத்தை எற்படுத்தும், அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இப் பரிசோதனையானது அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முன்னரே சில வகையான HPV களைக் கண்டுபிடிக்கின்தொன்றாகும்
நீங்கள் 25 வயதிற்கும் 74 வயதிற்கும் இடைப்பட்டவரெனில், ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய்ப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். நீங்கள் கருப்பை வாய்ப் பரிசோதனை ஒன்றைச் செய்துகொள்வதற்காக ஆஸ்திரேலிய அரசு கடிதம் மூலமாக உங்களுக்கு அழைப்புவிடுக்கும். உங்கள் பரிசோதனைக்கான முன்பதிவை மேற்கொள்ள, உங்கள் மருத்துவரிடமோ அல்லது சுகாதாரப் பணியாளரிடமோ பேசுங்கள், அல்லது ஒரு கருப்பை வாய் பாரிசோதனைத் தாதி அல்லது மருத்துவரைக் கண்டுபிடிக்க எமது விபரக்கோவையைப் பயன்படுத்துங்கள்.

கருப்பை வாய்ப் பரிசோதனை நீங்கள் செய்துகொள்வது அவசியம்:
- நீங்கள் ஒரு பெண் எனில்
- நீங்கள் 25 க்கும் 74 க்கும் இடைப்பட்ட வயதுடையவர் எனில்
- நீங்கள் எப்போதாவது பாலுறவு கொண்டிருந்தீர்கள் எனில்
பின்வருவன உங்களுக்குப் பொருந்தும் எனினும் நீங்கள் கருப்பை வாய் பரிசோதனையைச் செய்வகொள்வது அவசியம்.
- HPV தடுப்பூசி ஒன்றைப் பெற்றிருந்தீர்கள்
- மாதவிடாய் நிறுத்தத்தைக் கடந்திருந்தீர்கள்
- ஒரே ஒரு பாலியல் துணைவர் மட்டுமே இருந்துள்ளார்
- பெண் உறுப்பு சிதைப்பு அல்லது பாரம்பரியப் பெண்ணுறுப்பு வெட்டல்களை அனுபவித்தவர்
- குழந்தை பெற்றுக்கொண்டவர்
- திருமணமானவர் அல்லது இன்னொருவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தவர்
- விவாகரத்து பெற்றவர் அல்லது விதவை
- பெண் துணைவர்களுடன் பாலியல் தொடர்புள்ளவர்
நீங்கள் ஒரு கருப்பை அகற்றுச் சிகிச்சைப் பெற்றுக்கொண்டவர் எனில், கருப்பை வாய்ப் பரிசோதனை பற்றி தயவுசெய்து உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
மேலதிகத் தகவல்களுக்கு, 13 14 50 எனும் இலக்கத்தில் Cancer Council (கான்சர் கவுன்சில்) ஐ அழைத்து உங்கள் மொழியில் ஒருவருடன் பேசவேண்டும் எனக் கேளுங்கள்.
View this page in English