
25 முதல் 74 வரைக்குமான வயதுள்ள அனைத்துப் பெண்களுக்கும் கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனை முக்கியம்.
கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனையை மேற்கொள்வது கருப்பை-வாய்ப் புற்றிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடும். ‘மானிட பாப்பிலோமா-வைரஸ்’ (human papillomavirus (HPV)) தொற்று உங்களுக்கு இருக்கிறதா என்று இந்த சோதனை பார்க்கும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்காவிட்டால், கருப்பை-வாய்ப் புற்றுநோய்க்கு வழி வகுக்கக்கூடிய மாற்றங்களை உங்களுடைய கருப்பை-வாய் உயிரணுக் கலன்களில் HPV-யினால் தோற்றுவிக்க இயலும்.
நீங்கள் 25 முதல் 74 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர் என்றால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனை ஒன்று உங்களுக்குத் தேவை. தபால் மூலம் கடிதம் ஒன்றை உங்களுக்கு அனுப்பி கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனை ஒன்றை மேற்கொள்வதற்கான அழைப்பு ஒன்றை ஆஸ்திரேலிய அரசாங்கம் உங்களுக்கு அனுப்பும்.
உங்களுடைய சோதனைக்கான முன்பதிவினைச் செய்ய, உங்களுடைய மருத்துவர் அல்லது சுகாதார ஊழியருடன் பேசுங்கள், அல்லது உங்களுக்கேற்ற கருப்பை-வாய்ப் புற்று சோதனை செவிலி அல்லது மருத்துவர் ஒருவரைக் கண்டறிய ‘எமது விவரத்-திரட்’டைப் பயன்படுத்துங்கள்.
பின் வருவன உங்களுக்குப் பொருந்தினால், கருப்பை-வாய்ப் புற்று சோதனை உங்களுக்கு தேவை:
நீங்கள் ஒரு பெண் என்றால்
நீங்கள் 25 முதல் 74
வரைக்குமான வயதுள்ளவர்
என்றால்
நீங்கள் எப்போதாவது பால்-
ரீதியாக ஈடுபாடு உள்ளவராக இருந்திருந்தால்
பின் வருவன உங்களுக்குப் பொருந்தினால், அப்போதும் கருப்பை-வாய்ப் புற்று சோதனை உங்களுக்குத் தேவை:
HPV தடுப்பூசியை நீங்கள் இட்டுக்கொண்டவர்
என்றால்
உங்களுக்கு மாதவிடாய்
நின்றுவிட்டிருந்தால்
பால்-ரீதித் துணைவராக ஒருவருடன்
மட்டுமே இருந்திருந்தால்
பாரம்பரிய முறைப்படி பிறப்புறுப்பு
அறுக்கப்பட்டிருந்தால்
குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால்,
மணமாகியிருந்தால், அல்லது இன்னொரு
நபருடன் பால்ரீதியான உறவில்
இருந்திருந்தால்
விவாக-ரத்து ஆகியிருந்தால், அல்லது
விதவையாகியிருந்தால்
பெண்-துணைவர்களுடன் பாலுறவு
கொண்டிருந்தால்
கர்ப்பப்-பை நீக்க அறுவைசிகிச்சையை நீங்கள் மேற்கொண்டிருந்தால், கருப்பை-வாய்ப் புற்றுநோய்ச் சோதனையைப் பற்றி தயவு செய்து உங்களுடைய மருத்துவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
யோனியிலிருந்து மாதிரி ஒன்றை எடுத்து கருப்பை-வாய்ப் புற்றுநோய்ச் சோதனையை நீங்களாகவே செய்துகொள்ளலாம், அல்லது உங்களுடைய கருப்பை-வாயில் இருந்து மாதிரி ஒன்றை சேகரிக்கும் மருத்துவர் அல்லது செவிலி ஒருவரிடம் சென்று இந்த சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனைக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.
கருப்பை-வாய்ப் புற்றுநோய்ச் சோதனை ஒன்றை நீங்கள் மேற்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றால், சோதனைக்காக உங்களுக்கிருக்கும் தெரிவுகளைப் பற்றி உங்களுடைய மருத்துவர் அல்லது செவிலியுடன் பேசுங்கள், அல்லது 13 14 50-ஐ அழைத்து (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி – மாலை 5 மணி) Cancer Council எனும் அமைப்பின் தகவல் மற்றும் ஆதரவுதவி செவிலியர்களுடன் உங்களுடைய மொழியில் பேசவேண்டுமெனக் கேளுங்கள்.
View this page in English