25 முதல் 74 வரைக்குமான வயதுள்ள அனைத்துப் பெண்களுக்கும் கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனை முக்கியம்.

">

கருப்பை-வாய்ப் புற்றுநோய்ச் சோதனை ஆரோக்கியமாக இருப்பதற்கான நல்லதொரு வழியாகும்

 

25 முதல் 74 வரைக்குமான வயதுள்ள அனைத்துப் பெண்களுக்கும் கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனை முக்கியம்.

கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனையை மேற்கொள்வது கருப்பை-வாய்ப் புற்றிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடும். மானிட பாப்பிலோமா-வைரஸ்’ (human papillomavirus (HPV)) தொற்று உங்களுக்கு இருக்கிறதா என்று இந்த சோதனை பார்க்கும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்காவிட்டால், கருப்பை-வாய்ப் புற்றுநோய்க்கு வழி வகுக்கக்கூடிய மாற்றங்களை உங்களுடைய கருப்பை-வாய் உயிரணுக் கலன்களில் HPV-யினால் தோற்றுவிக்க இயலும்.

நீங்கள் 25 முதல் 74 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர் என்றால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனை ஒன்று உங்களுக்குத் தேவை. தபால் மூலம் கடிதம் ஒன்றை உங்களுக்கு அனுப்பி கருப்பை-வாய்ப் புற்றுச் சோதனை ஒன்றை மேற்கொள்வதற்கான அழைப்பு ஒன்றை ஆஸ்திரேலிய அரசாங்கம் உங்களுக்கு அனுப்பும்.  

உங்களுடைய சோதனைக்கான முன்பதிவினைச் செய்ய, உங்களுடைய மருத்துவர் அல்லது சுகாதார ஊழியருடன் பேசுங்கள், அல்லது உங்களுக்கேற்ற கருப்பை-வாய்ப் புற்று சோதனை செவிலி அல்லது மருத்துவர் ஒருவரைக் கண்டறிய எமது விவரத்-திரட்டைப் பயன்படுத்துங்கள். 

பின் வருவன உங்களுக்குப் பொருந்தினால், கருப்பை-வாய்ப் புற்று சோதனை உங்களுக்கு தேவை:

நீங்கள் ஒரு பெண் என்றால்

நீங்கள் 25 முதல் 74

வரைக்குமான வயதுள்ளவர்

என்றால்

நீங்கள் எப்போதாவது பால்-

ரீதியாக ஈடுபாடு உள்ளவராக இருந்திருந்தால்

பின் வருவன உங்களுக்குப் பொருந்தினால், அப்போதும் கருப்பை-வாய்ப் புற்று சோதனை உங்களுக்குத் தேவை:

HPV தடுப்பூசியை நீங்கள் இட்டுக்கொண்டவர்

என்றால்

உங்களுக்கு மாதவிடாய்

நின்றுவிட்டிருந்தால்

பால்-ரீதித் துணைவராக ஒருவருடன்

மட்டுமே இருந்திருந்தால்

பாரம்பரிய முறைப்படி பிறப்புறுப்பு

அறுக்கப்பட்டிருந்தால்

குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால்,

மணமாகியிருந்தால், அல்லது இன்னொரு

நபருடன் பால்ரீதியான உறவில்

இருந்திருந்தால்

விவாக-ரத்து ஆகியிருந்தால், அல்லது

விதவையாகியிருந்தால்

பெண்-துணைவர்களுடன் பாலுறவு

கொண்டிருந்தால்

கர்ப்பப்-பை நீக்க அறுவைசிகிச்சையை நீங்கள் மேற்கொண்டிருந்தால், கருப்பை-வாய்ப் புற்றுநோய்ச் சோதனையைப் பற்றி தயவு செய்து உங்களுடைய மருத்துவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

யோனியிலிருந்து மாதிரி ஒன்றை எடுத்து கருப்பை-வாய்ப் புற்றுநோய்ச் சோதனையை நீங்களாகவே செய்துகொள்ளலாம், அல்லது உங்களுடைய கருப்பை-வாயில் இருந்து மாதிரி ஒன்றை சேகரிக்கும் மருத்துவர் அல்லது செவிலி ஒருவரிடம் சென்று இந்த சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனைக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

கருப்பை-வாய்ப் புற்றுநோய்ச் சோதனை ஒன்றை நீங்கள் மேற்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றால், சோதனைக்காக உங்களுக்கிருக்கும் தெரிவுகளைப் பற்றி உங்களுடைய மருத்துவர் அல்லது செவிலியுடன் பேசுங்கள், அல்லது 13 14 50-ஐ அழைத்து (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி – மாலை 5 மணி) Cancer Council எனும் அமைப்பின் தகவல் மற்றும் ஆதரவுதவி செவிலியர்களுடன் உங்களுடைய மொழியில் பேசவேண்டுமெனக் கேளுங்கள்.

 

View this page in English